CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து முதல் நாளில் 222/3

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று மவுன்ட் மவுங்கானுயில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், டாம் பிளன்டெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லாதம் (4), பிளன்டெல் (5) சொற்ப ரன்களில் ஷாஹீன் அப்ரிடி பந்தில வீழ்ந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சனுடனும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 133 ரன்னாக இருக்கும்பேது ராஸ் டெய்லர் 70 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. 4-வது விக்கெட்டுக்கு வில்லியம்சனுடன் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை பிரிக்க முடியவில்லை. கேன் வில்லியம்சன் சதத்தை நெருங்கிய நிலையில், நியூசிலாந்து 87 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேன் வில்லியம்சன் 243 பந்தில் 94 ரன்கள் எடுத்தும், நிக்கோல்ஸ் 100 பந்தில் 42 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker