TAMIL

பவுண்டரில் உள்ளே-வெளியே தாவி தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்கள்..! அசத்தல் வீடியோ.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் அணி வீரர்கள் மேத்யூ ரென்ஷா மற்றும் டாம் பான்டன் இருவரும் சேர்ந்து பவுண்டரி கோட்டில் அசத்தலாக பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

அதே சமயம் இந்த கேட்ச்-க்கு 3வது நடுவர் அவுட் கொடுத்ததற்கு சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலிய உள்ளுர் போட்டி தொடரான பிக் பாஷ் லீக்கில் இன்று பிரிஸ்பேன்-ஹோபார்ட் அணிகள் மோதின.



பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியல் வென்ற ஹோபார்ட் அணி முதல் துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் 14வது ஒவரை பிரிஸ்பேன் வீரர் பென் கட்டிங் வீச, துடுப்பாடிய ஹோபார்ட் அணித்தலைவர் மேத்யூ வேட் பந்தை பறக்க விட்டார்.

எல்லை கோட்டிற்கு அருகே இருந்த ரென்ஷா பந்தை கேட்ச் பிடித்தார், எனினும் பவுண்டரிக்கு வெளியே சென்று விடுவோம் என்ற பயத்தில் பந்தை மேலே நோக்கி வீசினார்.

பின், பவுண்டரிக்கு வெளியே சென்ற அவர், அந்தரத்தில் பறந்து பந்தை பவுண்டரிக்கு உள்ளே தட்டிவிட, கோட்டிற்கு அருகே வந்த டாம் பான்டன் பந்தை கேட்ச் பிடித்தார்.

வீடியோ மூலம் ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் என அறிவித்தார். இதனையடுத்து, 46 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய மேத்யூ வேட் நடையை கட்டினார்.



2013-ல் புதுப்பிக்கப்பட்ட கிரிக்கெட் சட்டங்களின் படி இது கேட்ச் ஆகும். கிரிக்கெட் ரசிகர்கள் பலர், பவுண்டரிக்கு வெளியே இருந்து

பந்தை தட்டிவிட்டு உள்ளே பிடித்தது எப்படி கேட்ச் ஆகும் என்று சரமாரி கேள்விகளை எழுப்பி குறித்த விதியை விமர்சித்தும் திட்டி தீர்த்தும் வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker