ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், மும்பை அணி 208 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியி, வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர்.
போட்டி ஷார்ஜாவில், நடப்பதால் மைதானம் சிறியது என்பதால், ரோகித் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸருடன் பெளலியன் திரும்பினார்.
அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 27 ஓட்டங்களிலும் வெளியேற, இஷான் கிஷனுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் குயிண்டன் டி காக்.
இதன் மூலம் அரைசதம் அடித்த அவர் 67 ஓட்டங்களிலும், இஷான் கிஷான் மனீஷ் பாண்டேவின் அற்புதமான கேட்ச் மூலம் 31 ஓட்டங்களிலும் வெளியேறினார்.
இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி 200 ஓட்டத்தை தாண்டுமா என்ற போது, அடுத்து வந்த ஹார்தி பாண்ட்யா 19 பந்தில் 28 ஓட்டங்கள், பொல்லார்ட் 13 பந்தில் 15 ஓட்டங்கள் எடுக்க, 7-வது வீரராக வந்த க்ருணல் பாண்ட்யா கடைசி நான்கு பந்தில் 20 ஓட்டங்கள் குவிக்க, மும்பை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது.
ஹைதராபாத் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மற்றும் சித்தார் கல் 2 விக்கெட்டுகளும், ரசீத் கான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.