TAMIL
பயிற்சியை முடித்து சொந்த ஊர் சென்றார், டோனி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சென்னையில் சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டதால், டோனி தனது பயிற்சியை முடித்துக் கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.