TAMIL
பந்த்தா? சாம்சனா? எல்லாம் இவர்கள் கையில் தான் உள்ளது! பிசிசிஐ தலைவர் கங்குலியின் அதிரடி பதில்
இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்ட வரும் நிலையிலும், பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் அணித் தலைவருமான கங்குலியின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
பந்த்துக்கு பதிலாக கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்குமாறு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது, ரிஷாப் பந்த் தனித் திறமை வாய்ந்தவர், அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் எவ்வாறு சிறப்பாக விளையாடினார் என்பதைப் பார்த்தோம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை நன்றாக இருந்தது, ஆனால் இறுதி முடிவு தேர்வாளர்களிடம் விடப்படும் என்று கங்குலி கூறினார்.
டோனியின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டபோது, அவை வீரர்கள் மற்றும் மேலாளர்களிடையேயான தனிப்பட்ட விவாதங்கள் மற்றும் அங்கேயே நான் அதை விட்டுவிடுவேன் என கூறியுள்ளார்.