CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
பஞ்சாப் உடன் போட்டியிட்டு மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே
சென்னையில் ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யுடன் கடும் போட்டியிட்டது. 14 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு கேட்க சென்னை சூப்பர் கிங்ஸ் அதற்கு மேல் கேட்கவில்லை.
மொயீன் அலியை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் கடும் போட்டியிட்டது. பஞ்சாப் கிங்ஸ் 6.75 கோடி ரூபாய் வரை கேட்டது. பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் மொயீன் அலி விசில் போடு குரூப்பில் இணைகிறார்