CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பங்களாதேஷுடனான தொடரை அள்ளிச் சுருட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி

டாக்காவில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் சுழல்பந்துவீச்சாளர்கள் கைப்பற்ற, மேற்கிந்தியத் தீவுகள் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 2 -– 0 என முழுமையாக கைப்பற்றியது

ரக்கீம் கோர்ன்வோல் 4 விக்கெட்களையும் க்ரெய்க் ப்றத்வெய்ட், ஜோமெல் வொரிக்கன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றி மேற்கிந்தியத் திவுகளின் வெற்றியை உறுதிசெய்தனர்.

231 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் போட்டியில் மேலும் ஒருநாள் இருந்ததால் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் சுழல்பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ளத் தவறிய பங்களாதேஷ், சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷின் 9ஆவது வீக்கெட் வீழ்ந்த பின்னர் மெஹ்தி ஹசன் அதிரடியில் இறங்கி 2 சிக்கர்களையும் 3 பவுண்டரிகளையும் விளாசி அடித்து ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். எனினும், மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் நிதானத்தைக் கடைப்பிடித்து பங்களாதேஷை ஏமாற்றம் அடையச் செய்தனர்.

பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஆரம்ப வீரர் தமிம் இக்பால் அதிரடியாக 50 ஓட்டங்களைப் பெற்று சௌமியா சர்க்காருடன் முதலாவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.இவர்கள் இருவரது விக்கெட்களையும் ப்றத்வெய்ட் வீழ்த்தியதும் கோர்ன்வோலும் வொரிக்கனும் துல்லியமாக பந்துவீசி பங்களாதேஷை தடுமாறச் செய்தனர்.

 

போட்டியின் நான்காம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மெற்கிந்தியத் தீவுகள், மேலதிகமாக 76 ஓட்டங்களுக்கு எஞ்சிய 7 விக்கெட்களையும் தாரைவார்த்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள்.

எவ்வாறாயினும் பங்களாதேஷும் இரண்டாவது இன்னிங்ஸில் பிரகாசிக்கத் தவறி தோல்வி அடைந்தது.இரண்டு அணிகளுக்கும் இடையில் சிட்டகொங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றிருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் 1வது இன்: 409 (ஜொஷுவா டா சில்வா 92, நிக்ருமா பொன்னர் 90, அல்ஸாரி ஜோசப் 82, அபு ஜாயெத் 98 – 4 விக்., தய்ஜுல் இஸ்லாம் 108 – 4 விக்.)’2வது இன்: 117 (நிக்ருமா பொன்னர் 38, ஜொஷுவா டா சில்வா 20, தய்ஜுல் இஸ்லாம் 36 – 4 விக்., நயீம ஹசன் 34 – 3 விக்.)பங்களாதேஷ் 1வது இன்: 296 (லிட்டன் தாஸ் 71, மெஹிதி ஹசன் மிராஸ் 57, முஷ்பிக்குர் ரஹிம் 54, ராக்கீம் கோர்ன்வோல் 74 – 5 விக்., ஷெனன் கேப்றியல் 70 – 3 விக்.)’ 2வது இன்: (வெற்றி இலக்கு 231) (தமிம் இக்பால் 50, மெஹிதி ஹசன் மிராஸ் 31, ரக்கீம் கோர்ன்வோல் 105 – 4 விக்., க்ரெய்க் ப்றத்வெய்ட் 25 – 3 விக்., ஜோமெல் வொரிக்கன் 47 – 3 விக்.)

ஆட்டநாயகன் ராக்கீம் கோர்ன்வோல், தொடர்நாயகன் நிக்ருமா பொன்னர் ஆகியோர் தெரிவானர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker