TAMIL

நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்தில் பிரித்வி ஷா விலகல்

ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார்.

தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.



நாளை மறுதினம் நியூசிலாந்துக்கு புறப்படும் இந்திய ‘ஏ’ அணியில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றிருந்தார்.

அங்கு 17, 19-ந்தேதிகளில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார்.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் அவர் ஆடுவாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker