CRICKETLATEST UPDATESNEWSTAMIL

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 239 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ‌ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 401 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

நியூசிலாநது வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

80 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. ஆபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்தில் ‘அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து முகமது அப்பாஸ், அசார்அலி, ஹாரிஸ் சோகைல், பவாத் ஆலம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் திரும்பினார்கள்.

சவுத்தி, ஜேமிசன் தலா 2 விக்கெட்டும், போல்ட், வர்னர தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

7-வது விக்கெட்டான கேப்டன் முகமது ரிஸ்வான்- பகீம் அஸ்ரப் ஜோடி பாலோ ஆனை தவிர்க்க போராடினர்.

பாலோஆனை தவிர்க்க பாகிஸ்தான் 232 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் 187 ரன்கள் எடுத்த போது கேப்டன் ரிஸ்வான் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 142 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த வீரரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது. இதனால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker