TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு ;
இந்தியா ;
பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகம்மது சமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா,
நியூசிலாந்து;
மார்டின் குப்தில், ஹென்ரி நிகோலஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்),டோம் ப்ளண்டெல், ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, இஷ் சோதி, ஹமிஷி பென்னெட்