TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது.
இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று
(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன் 2 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மறுபுறம் ராகுலுடன் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கி விளையாடினார்.
இதில், ராகுல் 45 (33 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் 60 (41 பந்துகள்) எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.
தொடர்ந்து துபே 5 (6 பந்துகள்) ரன்களில் வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் சந்தோஷ் 33 மற்றும் மணீஷ் கிருஷ்ணானந்த் 11 (4 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்றோ ஆகியோர் களமிறங்கினர்.
நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் எல்பிடபிள்யு ஆகி தனது
விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதனையடுத்து காலின் முன்றோ 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களம் இறங்கிய டிம் செய்பெர்ட் மற்றும் ராஸ் டெய்லர் அதிரடியாக விளையாட தொடங்கினார்.
டிம் செய்பெர்ட் 30 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
பின்னர் சைனி விசீய ஓவரில் டிம் செய்பெர்ட் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக
விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
நிதானமாக விளையாடிய ராஸ் டெய்லர் 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து சைனி வீசிய
ஓவரில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆகி தனது
விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய டிம் சவுதி மற்றும் ஸ்காட் குஜ்ஜெலின் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் சோதி, ஹாமிஷ் பென்னட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும் சைனி மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் தலா
ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.