TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது.
இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறியதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா களமிறங்கி விளையாடி வருகிறார்.