TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி இரண்டாவது வெற்றி

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

அதனை தொடந்து 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன் விராட் கோலி (11 ரன்கள்) டிம் சவுதி வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து ஜொடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, இந்த ஜோடி பிரிந்தது.



இறுதியாக இந்திய அணி 17.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 133 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தார்.

இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3 வது 20 ஓவர் போட்டி வரும் 29 ஆம் தேதி (புதன்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker