TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: இந்தியா வெற்றி பெற 204 ரன்கள் இலக்கு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.
இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, சஹால், தூபே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் மன்ரோ 59, ராஸ் டெய்லர் 54, வில்லியம்சன் 51, கப்தில் 30 ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.