TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், காலின் டி கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஸ்காட் குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.