TAMIL

நாம் செய்யும் ஒரு தவறு கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைப் பாதிக்கும் – ரிஷப் பண்ட்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்தும் உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிலிருந்து தங்கள் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி காவல்துறையை ஆதரிக்க வேண்டும் என்றும், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மக்களை வலியுறுத்தினார்.

கிரிக்கெட் உதாரணத்தை மேற்கோள் காட்டி, ஒரு கேட்சை கைவிடுவது அல்லது ஸ்டம்பிங் வாய்ப்பை கைவிடுவது விளையாட்டின் திசையை மாற்றும்,

அதே போன்று, நாம் செய்யும் ஒரு தவறு கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைப் பாதிக்கும் என்று கூறினார்.

மேலும் டெல்லி காவல்துறையை ஆதரிப்போம், இந்திய அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்போம்.

வீட்டில் இருங்கள், அத்தியாவசிய வேலைக்காக மட்டும் வெளியே செல்லுங்கள் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்.

இந்தப் போரில் நாம் வெல்ல வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

டெல்லி போலீஸ் வெளியிட்ட வீடியோவில் ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker