TAMIL
‘நான் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள்’ – ரோகித் சர்மா ருசிகரம்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை அல்லது ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
பதில்: இரண்டுக்கும்.
கேள்வி: தற்போதைய காலக்கட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசிக்கிறீர்கள்?
பதில்: ஜாசன் ராய் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா)
கேள்வி: ஊரடங்கு முடிந்ததும் அடுத்த கட்ட திட்டம் என்ன?
பதில்: மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தான்.
கேள்வி: டோனி குறித்து ஒரு வார்த்தை?
பதில்: ஜாம்பவான்
கேள்வி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஒரு வார்த்தை?
(இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ‘கோலி குறித்து ஒரு வார்த்தை’ என்ற கூறியபடி மூன்று விதமான பொம்மைகளை (ஈமோஜி) பதிவிட்டார். சிரித்தபடி காணப்பட்ட அந்த எமோஜிகளை பார்த்து அதற்குரிய வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார்.)
கேள்வி: ஒரு நாள் கிரிக்கெட்டில் முச்சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் இதில் உங்களது விருப்பம்?
பதில்: இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தானே….வேறென்ன?
கேள்வி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து?
பதில்: மிகச்சிறந்த அணி
கேள்வி: சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரில் உங்களது தேர்வு?
பதில்: (சிரித்தபடி) நான் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.