TAMIL

நான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன்….ஒரு கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன்! மறைந்த நடிகர் இர்ஃபான் கான்

பிரபல இந்தி நடிகரான இர்ஃபான் பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இவர் “நான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன். பணம் திரட்ட முடியததால் கிரிக்கெட் விளையாடுவதையே கைவிட்டேன் என்று மறைந்த நடிகர் இர்ஃபான்கான் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அந்தப் பேட்டிகள் வைரலாகி வருகின்றன. 2014 இல் டெலிகிராப் இந்தியா நாளிதழக்கு பேட்டியளித்த போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இர்ஃபான் கான் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இவர் மேலும் கூறுவதாவது,

“ஜெய்பூர் அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்தேன். சி.கே. நாயுடு கிரிக்கெட் போட்டிக்கு நான் தேர்வாகினேன். ஆனால் போட்டிக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை.

அப்போது என்னால் ஒரு 600 ரூபாய் கூட திரட்ட முடியவில்லை. அப்போது முடிவெடுத்தேன் கிரிக்கெட்டை என்னால் தொடர முடியாது என்று.

மேலும் அந்தப் பேட்டியில் மிகவும் பெருமை வாய்ந்த தேசிய நாடக் குழு பள்ளியில் சேர்வதற்காக ரூ.300 தேவைப்பட்டது, அதுவும் என்னிடம் இல்லை. ஆனால் என்னுடைய சகோதரி நல்வாய்ப்பாக எனக்கு பணத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்தார்.

கிரிக்கெட்டை கைவிடுவது என்பது உணர்ச்சிவசப்பட்ட முடியவில்லை. நன்றாக யோதித்தே எடுத்தேன்.

எப்படி இருந்தாலும் நாட்டுக்காக 11 பேர் தானே விளையாட முடியும், ஆனால் நடிகராகிவிட்டாலும் காலம் முழுவதும் நடிக்கலாமே என்ற எண்ணமும் இந்த முடிவிற்கு ஓர் காரணமாகிவிட்டது.

அதுவும் இப்போது வந்திருக்கும் டி20 கிரிக்கெட் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது” என இர்ஃபான் கான் தெரிவித்திருந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker