TAMIL
நடுநிலைமையை ஐசிசி எவ்வாறு மதிக்கிறது என்று பாருங்கள் – சோயிப் அக்தர்

10 கிரிக்கெட் வீரர்கள் ஜோடியின் புகைப்படங்களை வெளியிட்டு, எந்த ஜோடியின் சவாலைக் காண ஆவலாக உள்ளீர்கள் என ரசிகர்களிடம் கிரிக்இஃன்போ இணையத்தளம் கேள்வி எழுப்பியது.
கோலி vs வார்னே, அன்வர் vs பும்ரா, கேன் வில்லியம்சன் vs முரளி, ஸ்மித் vs அக்தர், சச்சின் vs ரஷித், பாபர் vs மெக்ராத், பீட்டர்சன்
vs ரபடா, பாண்டிங் vs ஆர்ச்சர், லாரா vs வாக்னர், டிவில்லியர்ஸ் vs அக்ரம் ஆகிய 10 ஜோடிகளும் ஒருவரையொருவர் எதிர்கொண்டால் அந்தப் போட்டி எப்படியிருக்கும் என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் நிறைய விவாதித்தார்கள்.
ஸ்மித்துடனான சவாலுக்கு டுவிட்டரில் சோயிப் அக்தர் கூறியதாவது:
உடலைத் தாக்கும் 3 பவுன்சர்கள், நான்காவது பந்தில் என்னால் ஸ்மித்தை வீழ்த்த முடியும் என்று வேடிக்கையாகப் பதில் அளித்தார்.
ஆனால் அக்தரின் டுவீட்டைக் கேலி செய்யும் விதமாக இதுபோன்று ஐசிசி டுவீட் செய்தது.
நடுநிலைமையை ஐசிசி எவ்வாறு மதிக்கிறது என்று பாருங்கள்.
இப்படித்தான் அங்கு நிலைமை உள்ளது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
A symbolic tweet, how ICC has thrown neutrality out of the window.
Basically this is how the state of affairs are run there 🙂 https://t.co/OEoJx30lXt— Shoaib Akhtar (@shoaib100mph) May 13, 2020