TAMIL

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (அக்.2- 06) நடைபெறுகிறது.



இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்) , ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ஆர்.அஷ்வின், ஜடேஜே, ரிதிமான் சகா ( விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகம்மது சமி

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker