TAMIL
தென்ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணிக்கு டி காக் கேப்டனாக நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி மோதுகிறது.
முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி கேப்டவுனில் நடக்கிறது.
இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வழக்கமான கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் அணியில் இடம் பெறவில்லை.
தொடர்ச்சியான தோல்விகளால் பிளிஸ்சிஸ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் அவர் திடீரென ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
லுதோ சிபம்லா, சிசான்டா மஹலா, ஜோர்ன் பார்ச்சுன், ஜன்மன் மலான், கைல் வெரினி ஆகிய புதுமுகங்களும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.