TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா 134 ரன்கள் சேர்ப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 9 ரன்னிலும், சற்று அதிரடி காட்டிய ஷிகர் தவான் 36 ரன்களிலும் கேட்ச் ஆகினர்.
அதற்கு பின் விராட் கோலி 9 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், குருணல் பாண்ட்யா 4 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் நவ்தீப் சைனி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
தென்ஆப்பிரிக்க அணியில் ரபடா 3 விக்கெட்டுகளும், போர்ச்சுன் , பீரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தப்ரைஸ் ஷம்சி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.