TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்:இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டம்
தென்ஆப்பிரிக்கா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.
டாம் சிப்லி 36 ரன்னிலும், ஜாக் கிரவ்லி 44 ரன்னிலும், ஜோ டென்லி 25 ரன்னிலும், கேப்டன் ஜோரூட் 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னுடனும், ஆலிவர் போப் 39 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், கேசவ் மகராஜ், ஆன்ரிச் நோர்ட்ஜி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.