TAMIL
தூங்க முடியாமல் தவிக்கிறேன்: கவலையை வெளியிட்ட இஷாந்த் சர்மா
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓட்டங்களும் குறைவாகவே விட்டுக் கொடுத்தார்.
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய இஷாந்த் சர்மா தன்னுடைய உடல்நிலைக் குறித்து சில விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்,
அதில், “நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை. இன்று கூட சிரமப்படுகிறேன். நான் விரும்பிய விதத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை.
அணி நிர்வாகம் என்னைக் கேட்டுக் கொண்டதால் விளையாடினேன். அணிக்காக எதனையும் செய்வேன். மகிழ்ச்சியாக இல்லை என்பது பந்துவீசுவதில் அல்ல. என்னுடைய உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை.
நேற்று இரவு 40 நிமிடங்கள் மட்டுமே என்னால் தூங்க முடிந்தது. நேற்று முன் தினம் 3 மணி நேரம்தான் தூங்கினேன்.
தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு ஆகியவற்றில் இருந்து எவ்வளவு தூரம் மீண்டு வருகிறேனோ அவ்வளவு தூரம் என்னால் களத்தில் பந்துவீச முடியும்.
நன்றாக தூங்கினாலே நன்றாக மீண்டுவிடுவேன்” என்று வலியுடன் தெரிவித்துள்ளார்.