சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, துபாயில் நடந்த பயிற்சியின் போது சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டோனி தலைமையிலான சென்னை அணி, வரும் 19-ஆம் திகதி முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதவுள்ளது.
அதே சமயம் நாளை தான் ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்படுவதால், இன்னும் இது உறுதி படுத்தப்படவில்லை.
இந்நிலையில், துபாய் சென்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்ட டோனி, சிக்ஸர்கள் பறக்க விட்ட காட்சியை சென்னை அணி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.
மேலும் ரெய்னா விட்டுச்சென்ற இடத்தை அவர் நிரப்ப வேண்டும் என்று ரெய்னா கேட்டுக் கொண்டதால் அவர் மூன்றாவது இடத்தில் இறங்கி அதிரடி காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே டோனிக்கு இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் இறங்கி ஆட வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்து வந்தது. தற்போது ரெய்னா இல்லாததால் நிச்சயம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதே போன்று சென்னையில் நடைபெற்ற வலை பயிற்சியின் போதும், டோனி இப்படி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அப்போது அருகில் இருந்த ரெய்னா விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.