TAMIL
தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம்
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
பென் ஸ்டோக்சின் தந்தை கெட் மற்றும் குடும்பத்தினர் அவரது ஆட்டத்தை பார்க்க தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பென் ஸ்டோக்சின் தந்தை கெட்டுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பென் ஸ்டோக்ஸ், தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வருவதால் பயிற்சியில் ஈடுபடவில்லை. எனவே இந்த டெஸ்டில் அவர் ஆடுவது கேள்விக்குறி தான்.
64 வயதான கெட், நியூசிலாந்து முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.