CRICKETLATEST UPDATESNEWSTAMIL
தடைக்காலம் முடிந்தபின் முதல் போட்டியிலேயே 8 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன்
வங்காளதேச அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததை மறைத்ததாக இவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் முடிந்து விளையாட தயாரானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்தார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்னில் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக பந்து வீசி 7.2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியால் 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. கேப்டனும், தொடக்க வீரருமான தமிம் இக்பால் 44 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.