TAMIL
டோனி அப்படியொரு முடிவெடுத்தால் இந்திய அணிக்கு தான் இழப்பு – கபில்தேவ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற டோனி முடிவு செய்தால் அது இந்தியாவின் இழப்பு என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகசிறந்த வீரர்களில் ஒருவரான டோனி, இந்தியாவை வழிநடத்திய மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று முக்கிய ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமையை பெற்றவர்.
இவர் இறுதியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.
350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடிய டோனி, இதுகுறித்து வாய்திறக்கவும் மறுத்து வருவதால் எந்த நேரத்திலும் ஓய்வை அறிவிக்கலாம் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடைய ஓய்வு குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், 38 வயதான அவர் வெளியேற
முடிவு செய்யும் போதெல்லாம் அது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
அவர் நாட்டிற்கு மிகச்சிறப்பான சேவைகளை செய்துள்ளார்.
அவரைப் போல யாரும் அதனை செய்யவில்லை.
அவர் தற்போது போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருவதால், எப்போது வெளியில் வந்து ஓய்வை அறிவிப்பார் என்று எனக்கு தெரியவில்லை.
அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் என்பதால் இது எங்களுக்கு இழப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்