ஐபிஎல் போட்டிகளை யொட்டி அணிகள் வலைபயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
சமீபத்தில் வலைபயிற்சியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்ற பேருந்தைத் தாக்கியது என்று மும்பை இந்தியன்ஸ் வீடியோ வெளியிட்டு விளம்பரப்படுத்த, இப்போது டோனியின் பயிற்சி ஆட்ட சிக்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வலைப்பயிற்சியில் அடிக்கும் சிக்ஸர்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய இப்படிப்பட்ட விஷயமாகி வருகிறது.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற டோனியின் திறமை இன்னமும் அப்படியே உள்ளது என்பதுதான் இதில் உள்ள உண்மை.
துபாயில் அவர் வலைப்பயிற்சியில் அடித்த சிக்ஸ் மைதான சுற்றுச்சுவரைத் தாண்டிப் போய் விழுந்தது.
டோனி அடித்த சிக்ஸ் வீடியோவை சென்னை அணி தனது டுவிட்டரில் வெளியிட்டது. பந்து லாங் ஆனில் நின்று கொண்டிருந்த முரளி விஜய் தலைக்கு மேல் சென்றது. சென்னை அணி மேலாளர் ரஸல் ராதாகிருஷ்ணன் ‘பந்து காணாமல் போய்விட்டதா?’ என்றார்.
முரளி விஜய் அருமையான டைமிங், என்ன பேட்ஸ்விங் என்று அந்த ஷாட்டுக்கு புகழாரம் சூட்டினார். சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.