TAMIL

டோனியின் சாதனையை முறியடித்தார், மோர்கன்

சவுதம்டனில் நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி

49.5 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

கேப்டன் இயான் மோர்கன் (106 ரன், 84 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) சதமும், டாம் பான்டன் (58 ரன்), டேவிட் வில்லி (51 ரன்) அரைசதமும் அடித்தனர்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் விளாசியவர் என்ற டோனியின் (322 ஆட்டத்தில் 211 சிக்சர்) சாதனையை மோர்கன் நேற்று முறியடித்தார்.

கேப்டன்ஷிப்பில் மோர்கனின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 215 ஆக (163 ஆட்டம்) உயர்ந்துள்ளது.

அடுத்து 329 ரன்கள் இலக்கை நோக்கி அயர்லாந்து அணி ஆடியது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker