CRICKETLATEST UPDATESNEWSTAMIL

டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை – ஐசிசி புகழாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 430 மற்றும் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டு இழப்புக்கு 223 ரன்களும் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. போட்டியின் இறுதி நாளில் அந்த அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். வெஸ்ட் இண்டீசில் அறிமுக வீரராக விளையாடிய கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5-வது முறையாக வெற்றி பெற்றதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்பாக, ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கைல் மேயர்சின் 210 நாட் அவுட், அந்த அணி வங்காளதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5-வது முறையாக 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் வெற்றிகரமுடன் சேசிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker