பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் பந்தை தடுக்க டைவ் அடித்த போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார்.
இதனால் பாதியில் வெளியேறிய அவர் அடுத்து வரும் போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் பந்து வீசிய அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.