IPL TAMILTAMIL

டெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

ராஜஸ்தான் அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி இடம் பிடித்தார். இதே போல் ஹெட்மயர் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ரன்) கேட்ச் ஆனார்.

ஆனால் இந்த முறை மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் பெரிய அளவில் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை.

மறுமுனையில் ரஹானே (15 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ரன்), ஸ்டோனிஸ் (13 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது.

இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் கடந்த ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (52 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்னில் ஏமாற்றினாலும் குயின்டான் டி காக்கும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அரைசதம் விளாசி அணியை தூக்கி நிறுத்தினர்.

டி காக் 53 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் சுழலில் சிக்கினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் இன்றியும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதனால் கடைசி பகுதியில் சற்று தடுமாறிய மும்பை அணி வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராட வேண்டியதாகி விட்டது.

மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொல்லார்ட் (11 ரன்), குருணல் பாண்ட்யா (12 ரன்) அவுட் ஆகாமல் நின்றனர்.

7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.

இதன் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டிப்பிடித்தது. டெல்லிக்கு 2-வது தோல்வியாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker