CRICKETLATEST UPDATESNEWSTAMIL
டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை வெளிப்படுத்த முடியும்: ரஷித் கான்
ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த டி20 சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர் ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் ரஷித் கான் அதிரடியாக விளையாடி குறைந்த பந்தில் அதிக ரன்கள் குவிக்கக் கூடியவர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்து காட்டியுள்ளார். இந்நிலையில் டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை காட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘எப்போதெல்லாம் இன்னிங்சில் மூன்று அல்லது நான்கு ஓவர்கள் மீதம் உள்ளதோ, அப்போதெல்லால் என்னால் களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்ற எண்ணம் எனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நான் களம் இறங்குவது சூழ்நிலையை பொறுத்தது. பிக் பாஷ் லீக்கில், 15-வது ஓவருக்குப்பின் நான் களம் இறங்கக்கூடிய அவசியம் குறித்து பேசியிருக்கிறேன். நீங்கள் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் இருந்து நேர்மறையாக கருத்தை பெற்றால், அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்.
நான் பேட்டிங் செய்வது குறித்து அதிக அளவில் யோசிப்பது கிடையாது. அந்த போட்டி முழுவதும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்பேன். அணிக்கு எனது சிறந்த பங்களிப்பை கொடுக்க முயற்சிப்பேன்’’ என்றார்.