CRICKETLATEST UPDATESNEWSTAMIL
டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சம்: நன்றி கூறிய கேஎல் ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமான கேஎல் ராகுல், அதிரடி பேட்டிங் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார்.
டெஸ்ட் போட்டியில் சற்று சொதப்பியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவர் டுவிட்டரில் பல சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறக்கூடியர். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி 50,02,256 ஆக உள்ளது.
இதுகுறித்து கேஎல் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் ‘‘உயர்வு மற்றும் தாழ்வு என எப்போதும், உங்களுடைய ஆதரவு இந்த பயணத்தை சிறப்பாக்கியது. அனைவருக்கும் நன்றி, உங்களுடைய ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.