TAMIL

டி-20 உலகக் கோப்பை: பூனம் யாதவ் சுழலில் சுருண்டது அவுஸ்திரேலியா.. முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றது.

மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.



இன்று சிட்னியில் நடந்த முதல் போட்டியில் குரூப் ஏ-வில் உள்ள அவுஸ்திரேலிய-இந்திய அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் தீப்தி சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய தரப்பில் பந்து வீச்சில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, பூனம் யாதவ்-ன் சுழலில் மளமளவென சரிந்து 19வது ஓவரில் 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

சிறப்பாக பந்து வீசிய பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker