TAMIL
டி-20 உலகக் கோப்பையில் களமிறங்கும் அதிரடி மன்னன்..! உறுதிப்படுத்திய பயிற்சியாளர்
ஏ.பி.டிவில்லியர்ஸ் விரும்பினால் வரவிருக்கும் டி-20 உலகக் கோப்பைக்கான அணியில் அவரும் ஒருவராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் மாதம் தென் ஆப்பரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்று யூகங்கள் பரவி வருகின்றன.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 2018 மே மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
இருப்பினும், 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையின் போது மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்தார்.
இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் அவர் விருப்பத்திற்கு எதிராக முடிவு செய்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொரை 2-1 என தென் ஆப்பரிக்கா இழந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் மார்க் பவுச்சர், டிவில்லியர்ஸ் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடையே விவாதமாக உள்ளார்.
ஆனால் அவர் எனக்கு எந்த விவாதமும் இல்லை. நான் அவருடன் உரையாடியிருக்கிறேன், என்ன நடக்கப் போகிறது என்பதை விரைவில் தெரியவரும்.
நான் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து நான் சொன்னது போல், நாங்கள் உலகக் கோப்பைக்குச் செல்கிறோம் என்றால், சிறந்த வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
டிவில்லியர்ஸ் நல்ல வடிவத்தில் இருந்தால், நாங்கள் அவரிடம் கேட்டுக் கொண்ட நேரத்தில் விளையாட விருப்பமாக இருந்தால், அந்த இடத்திற்கு அவர் தான் சிறந்தவர் என்றால், பின்னர் கண்டிப்பாக டிவில்லியர்ஸ் விளையாட வேண்டும்.
இது ஈகோக்கள் அல்லது எதையும் பற்றியது அல்ல, அந்த போட்டியை வென்று வெற்றிபெற உங்கள் சிறந்த அணியை உலகக் கோப்பைக்கு அனுப்புவது பற்றியது என்று பவுச்சர் கூறினார்.