பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
இதையடுத்து,160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர்.
சுந்தர் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிதார் 8 ரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் 52 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.