TAMIL
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்
போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நெல்லை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி நேற்று அறிவித்துள்ளார்.
இந்த போட்டிக்கான மாற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.