TAMIL
ஜூனியர் கபடி: சென்னை அணி இன்று தேர்வு
46-வது மாநில ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வருகிற 29-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான கபடி போட்டி விருகம்பாக்கத்தில் உள்ள பி.ஜி.பிரதர்ஸ் கபடி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் 20 வயதுக்கு உட்பட்டவர்களும், உடல் எடை 70 கிலோவுக்கு குறைவாக இருப்பவர்களும் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தகுந்த சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் இந்த போட்டியின் மேற்பார்வையாளர்களாக நிர்வாகிகள் மாறன், ஜெகதலன் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.