CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி – கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது. மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் ஆப்கானிஸ்தான், மோரிஷஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
அந்த வகையில் ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உள்ளது.
இந்நிலையில், ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா அரசுக்கு நன்றி என பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும், ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் அதை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார்.