TAMIL
சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகர் ரிஸ்வி தனிப்பட்ட முறையில் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு குறித்து அடிக்க விமர்சனம் செய்து வருகிறார்.
இதன்போது பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அக்தர் இதுகுறித்து சட்டத்துறையில் உள்ளவர்கள் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் ரிஸ்வி தனிப்பட்ட முறையில் சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து எஃப்.ஐ,ஏ. சைபர் கிரைம் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பார் கவுன்சில் “சட்ட சகோதரத்துவம் பற்றி பேசும்போது அக்தர் கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் ” என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் அக்தரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.