CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சொந்த மண்ணில் அதிக வெற்றி: எம்.எஸ். டோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2-வது இன்னிங்சில் சதம், 3 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் பட்டியலில் எம்எஸ் டோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. எம்எஸ் டோனி தலைமையில் இந்திய அணி இந்திய மண்ணில் 21 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது விராட் கோலி அதை சமன் செய்துள்ளார்.