CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி வருகிறது 5-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நேற்றுடன் கோரன்டைன் காலம் முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்திய வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா போன்ற முன்னணி வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்கான பயிற்சி மேற்கொண்டனர்.