TAMIL

சூப்பர் மேனாக மாறி பறந்து விரல் நுனியில் கேட்ச் பிடித்து அசத்திய வீரர்… மிரண்டு போன ஸ்மித்: வைரல் வீடியோ

மெல்பேர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து வீரர் நிக்கோல்ஸ் அசத்தில் கேட்ச் பிடித்து மைதானத்தை மிரள வைத்தார்.

ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் சிறப்பான திறமையை காட்டினார்.

போட்டியில் 104-வது ஒவரை வாக்னர் வீசி, பந்து ஸ்மித்தின் துடுப்பில் பட்டு ஸ்லிப் திசையில் சென்றது.



ஸ்லிப்பில் களதடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிக்கோல்ஸ், பின்புறமாக பறந்து விரல் நுனியில் கேட்ச் பிடித்து மிரள வைத்தார். அசத்தல் கேட்ச் பிடித்து நிக்கோல்ஸை அனைவரும் பாராட்டினர்.

சிறப்பாக விளையாடிய ஸ்மித் 85 ஓட்டங்களில் வெளியேறினார். அதுமட்டுமின்றி, ஸ்மித்துக்கு எதிராக 6 இன்னிங்ஸில் விளையாடிய வாக்னர் 5 முறை அவரது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker