TAMIL
சூதாட்ட சர்சையில் சிக்கிய திலங்க சுமதிபாலா…! உறுதிப்படுத்தியது இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலா மீது எந்த வித சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படவில்லை அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று இலங்கை கிரிக்கெட் கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, சூதாட்ட குழுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐசிசி அறிக்கை வெளியிட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு அப்போதைய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாாண்டோ, திலங்க சுமதிபால
எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த வித பதவிகளை வகிக்கவோ அல்லது நிர்வாகத்தில் எந்த வித நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது என தடை விதித்தார்.
இந்த தடை உத்தரவுக்கு எதிராக சமீபத்தல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் திலங்க சுமதிபாலா.
இந்நிலையில், நேற்று பெப்ரவரி 19ம் திகதி நடைபெற்ற இலங்கை-மேற்கிந்திய தீவுகள் தொடரை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது,பெப்ரவரி 11ம் திகதி சுமதிபாலா விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் செயலாளர் மோகன் டி சில்வாவுக்கு
இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லி டி சில்வா எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.
அதில், இலங்கை கிரிக்கெட்டில் பராமரிக்கப்படும் பதிவுகளின்படி, இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால
எம்.பி., ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது சூதாட்ட குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.