TAMIL

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் – ஹர்பஜன்சிங் வலியுறுத்தல்

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சேப்பாக்கம் யங்ஸ்டர்ஸ்-யூனிவர்சல் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 11-0 என்ற கோல் கணக்கில் தி இந்து அணியை வென்றது. எஸ்.டி.ஏ.டி. அணியில் சுந்தரபாண்டி 4 கோலும், விக்னேஷ் 3 கோலும் அடித்தனர். இன்னொரு ஆட்டத்தில் தபால் துறை அணி 17-0 என்ற கோல் கணக்கில் இக்பால் மனமகிழ் மன்ற அணியை பந்தாடியது. தபால் துறை அணியில் தினேஷ்குமார் 6 கோலும், நந்த குமார் 3 கோலும் அடித்தனர்.




* கோல் குயிஸ் அமைப்பு சார்பில் வேல்ஸ் சர்வதேச பள்ளியின் ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கு இடையிலான விளையாட்டு வினாடி-வினா போட்டி சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் சர்வதேச பள்ளி வளாகத்தில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதில் 8 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு அணியில் 2 பேர் இடம் பெற முடியும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 27-ந் தேதிக்குள் go-a-l-qu-iz@gm-a-il.com என்ற இ-மெயில் முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியான குரூப்1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மூத்த வீரர்களான அய்சம் உல்-ஹக் குரேஷி, அகீல் கான் ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டனர். இதனால் 17 வயதான ஹூஜைபா அப்துல் ரகுமான், சோகைப் கான் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அஜ்மத், இளம் வீரர்களான யூசுப் கான், அகமது கமில் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். அணி அறிவிப்புக்கு பிறகு பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலிம் சைபுல்லா கான் அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இஸ்லாமாபாத் வந்து செல்கிறார்கள். ஆனால் 6 இந்திய வீரர்கள் இங்கு வராதது வெட்கக்கேடானது’ என்று தெரிவித்துள்ளார்.

* டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மூத்த வீரர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker