
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான சுனில் நரைன் பந்து வீச்சு மீது சந்தேகம் எழுந்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 18-வது ஓவரை வீசிய நரைன் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.
அவரது இந்த பந்து வீச்சே ஆட்டத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சுனில் நரைன் பந்தை எறிவது போல சந்தேகம் உள்ளதாக கள நடுவர் புகார் அளித்துள்ளார்.
கள நடுவர் புகாரால் சுனில் நரைன் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டு தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுவார்.
மீண்டும் ஒருமுறை சுனில் நரைன் பந்து வீச்சில் சந்தேகம் எழுந்தால், அவர் தொடர்ந்து பந்து வீச தடை விதிக்கப்படும்.
சுனில் நரைன் பந்து வீச்சில் சந்தேகம் எழுவது இது முதல் முறை இல்லை.
ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் சுனில் நரைன் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஐசிசி தடையை இந்த விவகாரத்தில் சுனில் நரைன் சந்தித்துள்ளார்.