TAMIL

சிறந்த பேட்ஸ்மேன் நானா? டோனியா? பும்ராவிடம் கேள்வி எழுப்பிய யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலக்கட்டத்தில் தனது முந்தைய ருசிகர அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் இன்ஸ்டா மூலம் பேசிய யுவராஜ், மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேன் நானா? தோனியா? என்ற கேள்வியை முன்வைக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பும்ரா தடுமாறினார்.

பிறகு, ‘உங்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்பது, அம்மா, அப்பாவில் சிறந்தவர் யார் என்று கேட்பது போன்று உள்ளது எனக்கூறி பும்ரா சமாளித்தார்.

“சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? விராட் கோலி அல்லது சச்சின் தெண்டுல்கர் ”என்று யுவராஜ் சிங் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பும்ரா,

“யுவி பா, பாருங்கள் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகின்றன. நான் உங்களுக்கு ஒரு நீண்ட பதிலை தருகிறேன்.

அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு எனக்கு போதுமான அனுபவம் இல்லை.

விராட், தெண்டுல்கர், அவர்கள் என்னை விட நிறைய கிரிக்கெட் விளையாடியதால் நான் அந்த நிலையில் இல்லை, ”என்று பும்ரா கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

கிரிக்கெட்டின் சிறந்த தூதுவராக விளங்க வேண்டும் என்று பும்ராவுக்கு அட்வைஸ் மழையும் பொழிந்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker