CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சிட்னியில் ரோகித் சர்மா: 3-வது போட்டி இடம் மாறினாலும் அவருக்கு பிரச்சினை இல்லையாம்….
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2-வது டெஸ்ட மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடக்கிறது.
சிட்னியில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்ததால் சுற்றியுள்ள மாநிலங்கள் எல்லைகளை மூடி கட்டுப்பாடு விதித்துள்ளது. சிட்னியில் இருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இந்தியாவில் இருந்து புறப்பட்டு கடந்த 16-ந்தேதி சிட்னி சென்றடைந்தார். அவர் 14 நாட்கள் கோரன்டைனை முடித்து சிட்னி டெஸ்டில் பங்கேற்பது திட்டம்.
இன்றைய சூழ்நிலையில் சிட்னியில் டெஸ்ட் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. அப்படியானால் போட்டி மெல்போர்ன் அல்லது பிரிஸ்பேன் அல்லது அடிலெய்டுக்கு மாற்றப்பட வேண்டும்.
அப்படியென்றால் ரோகித் சர்மா சிட்னியில் இருந்து வெளியேறும்போது மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இருக்கும். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அரசிடம் பேசி ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை தனிமைப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை என்ற அனுமதியை பெற்றுள்ளது.
இதனால் ரோகித் சர்மா 14 நாட்கள் முடிந்தபின் சிட்னியில் இருந்து வெளியேறினாலும் அணியுடன் கலந்து கொள்ளலாம். 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். ரோகித் சர்மாவுக்கு இரண்டு படுக்கை கொண்ட அறையுடன் சிறப்பான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.